கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதையடுத்து சென்னையில் மிக பிரமாண்டமாக இந்த படத்தின் ப்ரீ ரீலிஸ் நிகழ்ச்சி நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்ட
நிலையில் இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி தொகுத்து வழங்கி இருந்தார். இப்படி இருக்கையில் நிகழ்ச்சியின் நடுவே யாரும் எதிர்பார்க்காத நிலையில் வாலிபர் ஒருவர் ஐஸ்வர்யா விடம் தவறாக நடந்து கொண்டார் இதனால் மிகுந்த கோபத்துக்கு உள்ளான ஐஸ்வர்யா அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியிருந்தார் . இதனைதொடர்ந்து இந்த வீடியோ மற்றும் தகவல்கள்
இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதன் காரணமாக இதற்கு பலரும் பலவிதமான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகை பிரியங்கா மோகன் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பாதுகாப்பு இருக்க வேண்டும் எல்லாரையும் மதிக்க வேண்டும், நம்ம வீட்டிலும் அம்மா
சகோதரிகள் உள்ளனர் அவர்களுக்கு மட்டும் எதாவது நடந்தால் சும்மா இருப்போமோ? ஆனால் நாம் அதையே வேறொரு பெண்ணுக்கு செய்தால் தப்பு இல்லையா ? என மிகுந்த வேதனையுடன் பிரியங்கா மோகன் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………….