தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் இன்றளவும் பல படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து வருபவர்கள் பிரபல முன்னணி நட்சத்திர ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் . இவர்கள் இருவரும் ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து
வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்தே இவர்கள் இருவருக்கும் தான் ரசிகர்கள் மத்தியில் போட்டி இருந்து வருகிறது. இருப்பினும் அது இன்றளவு வரை ஆரோக்கியமான போட்டியாக தான் இருந்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப ரஜினி மற்றும் கமல் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் ஒருமுறை ரஜினி அவர்கள் கமல் அவர்களை சந்தித்த
போது இனி நான் சினிமாவில் நடிக்கபோவதில்லை அதில் இருந்து விலக போகிறேன் என கூறியுள்ளார். மேலும் இதற்காக கமலிடம் யோசனை கேட்டுள்ளார் இதைகேட்டு அதிர்ந்து போன கமல் மேடை ஒன்றில் பேசியபோது, இந்த ஆளு ஒரு நாள் வந்து சினிமாவை விட்டு போயிடலாம்னு இருக்கேன் யோசனை கேட்டார். அதுவும்
அதை என்னிடம் வந்து கேட்டார் நீங்க சினிமாவை விட்டு போனீங்கனா என்னையும் போக சொல்லுவாங்க , என் வாழ்க்கையை கெடுக்காதீங்க ரஜினி என கூறினாராம் . இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………………