கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரையும் அதிர வைக்கும் வகையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரபல முன்னணி நடிகை பூனம் பாண்டே யாரும் எதிர்பாரதவிதமாக காலமாகி போனதாக தகவல்கள் வெளியாகி இருந்தது .
இதையடுத்து திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இன்றைய நாளில் பூனம் பாண்டேவின் இணைய பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பலரையும் உறைய செய்துள்ளது காரணம் அந்த வீடியோவில் பேசியிருப்பது வேறு யாருமில்லை காலமாகி போனதாக கூறப்பட்ட பூனம் தான் . இதனைதொடர்ந்து அந்த வீடியோவில்
பேசிய அம்மிணி, நான் உண்மையில் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறேன் கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் இப்படி செய்தேன் என கூறி அனைவரையும் உறைய செய்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில்
வெளியானதில் இருந்து பலரும் இதற்கு பலவிதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் அள்ளி தெளித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது…………………
View this post on Instagram