தமிழ் சினிமாவில் 80,90-களின் காலகட்டத்தில் இருந்து இன்றளவு வரை இயக்குனர், தயாரிப்பாளர் , நடிகர், எழுத்தாளர் என பல துறைகளில் அசத்தி திரையுலகில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சுந்தராஜன். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு நூறுக்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திரம், காமெடி, வில்லன் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில்
நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இவர் தற்போது படங்களில் நடிப்பதை தாண்டி சீரியல்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் சிறகடிக்க ஆசை எனும் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதோடு இவர் இறுதியாக கடந்த 2013-ம் ஆண்டு நிலா சோறு எனும் படத்தை இறுதியாக இயக்கியிருந்தார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் துர்கா எனும் டப்பிங் கலைஞரை திருமணம் செய்து கொண்ட நிலையில்
இவர்களுக்கு கார்த்திக், தீபன், அசோக் என மூன்று மகன்கள் உள்ளார்கள் இதில் ஒருவர் கார் விபத்து ஒன்றில் சிக்கி காலமானர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரது மனைவி, என்னுடைய கணவர் ஆரம்ப காலத்தில் பிசியாக வேலை பார்த்து கொண்டு இருந்தார் அந்த சமயத்தில் நாங்கள் காரில் தான் குடும்பம் நடத்தினோம். என் கணவர் ஒரு இடத்தில் சூட்டிங் இருப்பார் நான் ஒரு இடத்தில் டப்பிங் செய்து கொண்டு இருப்பார்.
அப்போது என்னை காரில் வந்து சந்திப்பார் நாங்கள் குடும்ப பிரச்சனைகள் அடுத்து என்ன செய்வது எல்லாம் காரில் வைத்துதான் பேசி முடிவு செய்வோம். இதையடுத்து அவர் கூறுகையில் எனது கணவர் எந்த இடத்திலும் என்னை விட்டு கொடுத்தது கிடையாது இந்த வயதிலும் நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம் என உருக்கமாக கூறியிருந்தார். இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………….