பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கும் நிலையில் அதேபோல் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் வேற லெவலில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த சேனலில் வெளியான பிரபல முன்னணி
ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றி கொண்டவர் பிரபல தொகுப்பாளினி விஜே மணிமேகலை. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது மட்டுமின்றி தனியாக யூடுப் சேனல்
ஒன்றையும் நடத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களாக எந்தவொருரியாலிட்டி நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் வாய்ப்பு ஏதும் கிடைக்காமல் தவித்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோஒன்றில்
பேசியுள்ள மணிமேகலை தான் பண கஷ்டத்தில் இருப்பதாகவும் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் ஹவுசிங் லோன் கூட சரியாக கட்ட முடியவில்லை என வருத்தமாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது……………..