தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று காக்கா முட்டை இந்த படம் சிறிய அளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையிலும் அதிகளவில் வசூல் சாதனையை படைத்து இருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாறுபட்ட கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் இந்த படத்தை பிரபல இளம் இயக்குனர் மணிகண்டன்
அவர்கள் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற பல படங்களை இயககியுள்ள நிலையில் இதில் கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் மணிகண்டன் அடுத்ததாக புதிதாக படம் ஒன்றை இயக்கி வரும் நிலையில்
சென்னையில் வீடு எடுத்து தனது குடும்பத்துடன் தங்கிய நிலையில் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் எழில் நகரில் இருக்கும் சொந்த வீடு பூட்டியிருந்ததை அடுத்து மர்ம கும்பல் ஒன்று அவரது வீட்டில் கைவரிசை காட்டியுள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டில் இறங்கிய திருட்டு கும்பல் மணிகண்டனின் இரண்டு தேசிய
விருதுகள் , ஐந்து சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ள நிலையில் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………………