பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் வாயிலாக தன்னை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் ரோபோ சங்கர் . இதையடுத்து தொடர்ந்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த நிலையில் இதன் மூலமாக பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக
நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே இன்றைக்கு திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் . இவ்வாறு பிரபலமாக பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரோபோ சங்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இந்திரஜா எனும் மகள் ஒருவர் உள்ளார். இவரும் கடந்த சில மாதங்களுக்கு
முன்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து விருமன் படத்திலும் நடித்திருந்தார் இவ்வாறு இருக்கையில் இவருக்கும் இவரது முறைமாமாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அவர்களது நிச்சயதார்த்தம் இன்றைய நாளில் வெகு
விமர்சையாக கொண்டாடப்பட்டது . மேலும் இந்த விழாவில் நக்கீரன் கோபால், அம்மா கிரியேசன் சிவா ஆகிய பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் அந்த விழாவில் எடுத்த பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருவதோடு பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்…………….