கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று வெண்ணிலா கபடி குழு இந்த படத்தில் ஹீரோவாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் விஷ்ணு விஷால். இதையடுத்து இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவருடன் அந்த படம் மட்டுமின்றி
பல படங்களில் ஒன்றாக நடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் பிரபல காமெடி நடிகர் சூரி. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், ஜீவா , குள்ளநரி கூட்டம், மாவீரன் கிட்டு போன்ற பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு படங்களில் ஏதும் நடிக்காமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஷ்ணு விஷாலின் தந்தை நிலம்
வாங்கி தருவதாக கூறி சுமார் 2.7 கோடி வரை ஏமாற்றி விட்டதாக குற்றம் கூறிய நிலையில் இது திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இருக்கையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஷ்ணு விஷால், நானும் சூரியும் பிரச்சனையை பேசி சரிசெய்து விட்டோம் எங்களுக்குள் பிரச்சனை வந்த போதே நெருங்கிய வட்டாரங்கள் பேசி முடித்து கொள்ள பலமுறை கூறினார்கள். இருந்தும் அது எங்களால் முடியாமல்
போனது ஆனால் இப்போது நாங்கள் இருவரும் தற்போது சந்திந்து பேசும்போது தான் என்ன நடந்தது என தெரிந்தது. எங்களுக்குள் மூன்றாவதாக வந்தவர் தான் எங்கள் பிரச்சனைக்கு காரணம் என தெரிய வந்தது. அவர் தான் எங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளார் என வெளிப்படையாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது……………….