தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகளும் தொடர்ந்து படங்களில் அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை தேடி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு
முன்னர் இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி எனும் கேரக்டரில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் . மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலமாக கதாநாயகியாக தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதையடுத்து
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருவதை அடுத்து தற்போது ஐஸ்வர்யா லட்சுமி புதிதாக ஆடம்பர கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வகையில் ரேஞ் ரோவர் எவகு 2024 மாடல் காரை வாங்கியுள்ள நிலையில் கேரளாவில்
இந்த காரை வாங்கிய முதல் நபர் இவர்தானாம் மேலும் இவர் இந்த காரை துல்கர் சல்மானின் கார் நிறுவனத்தில் வாங்கியுள்ளதை அடுத்து இதன் விலை மட்டும் சுமார் 75லட்சம் முதல் ஒரு கோடி வரை இருக்கும் என கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………….
View this post on Instagram