சமீபகாலமாக திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று வரும் நிலையில் தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா அவர்களின் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இதில் சூப்பர் ஸ்டார் மொய்தீன் எனும் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை தன்யா பாலகிருஷ்ணன் நடித்து வரும் நிலையில் இவர் இதற்கு முன்னரே ஏழாம் அறிவு, ராஜா ராணி, காப்பான், யார் இவன் போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் நிலையில் இவர் குறித்த சர்ச்சையான பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த
சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தண்ணீர் பிரச்சனை இருந்த நிலையில் அந்த தருணத்தில் ” தண்ணீருக்காகவும் மின்சாரத்திற்கும் எங்களிடம் கெஞ்சுகிறீர்கள் எங்கள் ஊரில் வந்து வசிக்கிறார்கள் உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்லையா ” என தனது இணைய பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் இவரை தமிழ் படத்தில் எப்படி நடிக்க வைக்கலாம் என பலரும்
கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கு பபதில் கொடுத்த தன்யா, அந்த பதிவை நான் போடவில்லை ட்ரோல் செய்யும் நபரால் சித்தரிக்கப்ட்டது. எனது தொழில் மீது சத்தியமாக நான் இதை செய்யவில்லை என கூறி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் பதிவு இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பெருத்த சர்ச்சையை கிளப்பி வருகிறது…………………..