தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமந்தா தற்போது பாலிவுட் சினிமாவில் சிட்டாடல் எனும் வெப் சீரியஸில்
நடித்து வருகிறார் . இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த சீரியசின் சூட்டிங் போது மயங்கி விழுந்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தார். அவருக்கு மையோசிடிஸ் எனும் நோய் இருக்கும் நிலையில் ஒரு இடத்தில நிலையாக ஒரு மணி நேரம் கூட நிற்க முடியாத நிலையில் பல மணிநேரம் கடுமையான சண்டை காட்சியில் நடித்து மயங்கி விழுந்தார். இந்நிலையில் அவர் விரைவில் அந்த நோயில் இருந்து மீண்டு வர
அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தா, அதில் தொகுப்பாளினி சில நடிகைகள் முத்த காட்சியில் எல்லாம் நடிக்க மாட்டேன் என கூறுவார்கள் அதேபோல் உங்களுக்கு எதாவது விசயம் இருக்கிறதா என கேட்டுள்ளார். இதையடுத்து இதற்கு பதில் கொடுத்த சமந்தா, நான் இப்போது முத்த காட்சியில் நடிக்க
மாட்டேன் என கூறினால் எல்லாரும் என்னை உதைப்பார்கள் முதல் படத்துலையே எல்லாம் பண்ணியாச்சு இப்போ என்ன முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என சொல்வது என சிரித்தபடி கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………….