கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் பிரபல முன்னணி நடிகர் விதார்த் மற்றும் நடிகை பூர்ணா நடிப்பில் டெவில் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோகமாக ஓடி வருகிறது. இந்த படத்தை சவரக்கத்தி படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஆதித்யா இயக்கிய நிலையில் இந்த
படத்திற்கு முதல் முறையாக மிஸ்கின் இசையமைத்துள்ளார் மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக பூர்ணா நடித்துள்ள நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அதில் பேசியபோது, இந்த படத்தில் நடிக்கும் போது தான் எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தது இதனால் டெவில் படத்தை என்னால்
எப்போதும் மறக்கவே முடியாது. மேலும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் நடித்து கொண்டு இருக்கும் போது தான் எனக்கு தலைசுற்றல் வந்தது அப்போது தான் எனக்கு கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த உடன் அங்கிருந்தவர்கள்
என்னை மிகவும் நன்றாக கவனித்து கொண்டார்கள் என உருக்கமாக பேசியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………