கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் சாட்டை. இந்த படம் இன்றளவும் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் பலரும் புதுமுகங்களாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் பள்ளி மாணவனாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம்
திரும்பி பார்க்க வைத்தவர் யுவன் . படத்தில் முரட்டுத்தனமான மாணவனாக மிகவும் தேர்ந்த நடிப்பை வெளிபடுத்திய நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வரும் என நினைத்த நிலையில் அது அனைத்தும் கனவாகி போனது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய யுவன், சாட்டை படத்தில் நடித்த பிறகு எனக்கு அடுத்ததாக பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது இதையடுத்து அந்த
படத்தில் எனக்கு பரோட்டா கடையில் பரோட்டா போடும் ரோல் அதன் காரணமாக நாகர்கோவில் சென்று அங்கு ஒரு கடையில் நான் யார் என சொல்லாமல் பரோட்டா போடும் வேலைக்கு சேர்ந்தேன் பத்து நாட்களுக்கு மேலாக அங்கு வேலை பார்த்தேன். ஆனால் படம் எதோ சில
காரணங்களால் டிராப் ஆகி விட்ட நிலையில் அதற்கடுத்து எந்த படங்களிலும் நடிக்கவில்லை தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்க தயராக இருப்பதாக யுவன் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது………….