சமீபகாலமாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் தங்களது துணையை தேடி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான கர்ணன் படத்தில் ஹீரோயினாக நடித்து
பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகை ரஜிஷா விஜயன். தனது முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டதை அடுத்து தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல
மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இப்படி ஒரு நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் ரஜிஷா மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வரும் நிலையில்
இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறபடுகிறது. இதற்கிடையில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும்படியாக பல புகைப்படங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு அவருக்கு பலரும் வாழ்த்து மழைகளை கொட்டி தீர்த்து வருகின்றனர்…………………
View this post on Instagram