இன்றைக்கு சினிமாவில் பல இளம் நடிகைகள் ஹீரோயினாக படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது திறமையான நடிப்பு மற்றும் இளமையான அழகால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான காதல்
ரோஜாவே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை பூஜா குமாரி. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ்,தெலுங்கு , கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து இன்றைக்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதையடுத்து உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படத்தில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம்
திரும்பி பார்க்க வைத்திருந்தார். இதனைதொடர்ந்து உத்தம வில்லன், மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த விஷால் ஜோஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில்
ஆர்வம் காட்டிய நிலையில் இவர்களுக்கு மகள் ஒரூவர் உள்ளார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பூஜா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது மகளுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த பலரும் அட இவருக்கு இப்படி ஒரு மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………..