தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல ரசிகர்களின் கனவு கன்னியாக இன்றளவும் இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை புன்னகை அரசி சினேகா . இவர் முதலில் மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டார் தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால்
பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து
குடும்பத்தை கவனித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார் இது ஒரு பக்கம் இருக்க சினேகா நடிப்பதை தாண்டி சுயமாக தொழில் தொடங்கும் நோக்கில் புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த வகையில் சிநேகலாயா சில்க்ஸ் எனும்
பெயரில் துணிக்கடை ஒன்றை பிரமாண்டமாக தொடங்கியுள்ளார் . இதனைதொடர்ந்து வரும் 12-ம் தேதி கடை துவக்க விழாவை முன்னிட்டு அதன் அழைப்பிதழ்களை முன்னணி திரை பிரபலங்கள் பலருக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…………………..