திரையுலகில் சமீபகாலமாக பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு நேர்மாறாக பல முன்னணி நடிகைகளும் திருமண வயதை கடந்த நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து
படங்களில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் களவானி படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ஓவியா. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஜோடியாக நடித்து வந்த நிலையில் தற்போது அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவிடம் , நிரூபர் அவரது திருமணம் குறித்து கேட்கையில், நான் சிங்கிளாக தான் இருக்கிறேன் நான் மகிழ்ச்சியாக இருக்க இன்னொருவர் தேவை என நினைக்கவில்லை. திருமணம் என்பது அதற்கான நேரத்தில் அமைய வேண்டும் நாம அதன் பின்னால் போக கூடாது. அது
வந்தால் ஓகே இல்லை என்றாலும் மகிழ்ச்சியாக தான் இருப்பேன் யாரிடம் இருந்தும் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை நான் தனியாக இருப்பதை விரும்புகிறேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………….