இன்றைக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்க வரும் பலருக்கும் இன்றளவும் முன் மாதிரியாக இருந்து வருவதோடு நடிப்புக்கு ஒரு பல்கலைகழகமாக வாழ்ந்து வருபவர் மறைந்த பிரபல முன்னணி நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான பராசக்தி படத்தின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு இவர் நடிக்காத
கதைகளோ கதாபாத்திரங்களோ இல்லை எனலாம் அந்த அளவிற்கு நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகம் மட்டுமின்றி மக்கள் பலரையும் இன்றளவும் தனது ரசிகர்களாக வைத்துள்ளார். மேலும் சொல்லப்போனால் பல முன்னணி நடிகர்களுக்கும் ஒரு காட்சியில் மட்டுமாவது இவருடன் நடித்து விடமாட்டோமோ என என்னும் அளவிற்கு நடிப்பில் பல சாதனைகளை படைத்துள்ளார் .
இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவரது மகன் மற்றும் பேரன் என பலரும் இன்றளவும் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றனர் . இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிவாஜி அவர்கள் உடல்நல குறைவால் காலமானார் என்னதான் இவர் நம்மை விட்டு மறைந்து இருந்தாலும் இவரது படங்கள் வழியாக நம்முடன் இன்றும் வாழ்ந்து வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க சிவாஜி கணேசன் அவர்களை தெரிந்த அளவிற்கு அவரது அப்பா மற்றும் அம்மா குறித்து பலருக்கும் தெரியாத நிலையில் சமீபத்தில் சிவாஜி அவர்கள் தனது அம்மா ராஜாமணி அம்மாள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வாசிகள் மத்தியில் பெரிதளவில் வைரளாகி வருகிறது……………………