தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் திண்டுக்கல் சாரதி . இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், எம் எஸ் பாஸ்கர், லிவிங்க்ஸ்டன் உள்பட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி
பார்க்க வைத்தவர் பிரபல நடிகை கார்த்திகா. இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே பல படங்களில் நடித்துள்ள நிலையிலும் இந்த படத்தின் மூலமாக தான் வெகு பிரபலமானார். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு பிசியாக தொடர்ந்து பல படங்களில்
நடித்து வந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலாரான மேத்யுவை திருமணம் செய்து கொண்டார். அதோடு அவரது கணவர் அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் நிலையில் அவருடன் அங்கேயே செட்டில் ஆகி விட்டார் . திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்த நிலையில்
தற்போது அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள் . இதையடுத்து தனது இணைய பக்கத்தில் சமீபத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக இருக்கும்படியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைபடத்தில் அவரை பார்த்த பலரும் நம்ம கார்த்திகாவா இப்படி என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………..