தற்போது சினிமாவில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படங்களில் நடிக்கும் நடிகர்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில்
கடந்த 2012-ம் ஆண்டு பிரபல இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான சாட்டை படத்தில் பள்ளி மாணவனாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் யுவன் எனும் அஜ்மல் கான். இந்த படத்தை அடுத்து கமர்கட்டு, கீரிபுள்ள போன்ற ஒரு சில படங்களில் நடித்த நிலையில் அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதும்
வராததை அடுத்து இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயிருந்தார். இப்படி இருக்கையில் யுவன் தந்தை பெரும் தொழிலதிபர் எனும் நிலையில் இவர் பல படங்களில் குணசித்திர கேரக்டரில் நடித்துள்ளார். இதையடுத்து பட வாய்ப்பு இல்லாததை அடுத்து யுவன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்க விலாஸ் அதிபர் சாதிக்
அலி மகள் ரமீஷா கஹணியை மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமணத்தில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில் திருமணத்தின் போது எடுக்கபட்ட பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருவதோடு அவருக்கு வாழ்த்து மழைகளை கொட்டி தீர்த்து வருகின்றனர்………………….