மக்கள் மத்தியில் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள் பிரபலமாக உள்ளதை அடுத்து பல முன்னணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஜெயலட்சுமி . இவர் தொடர்களில் நடிப்பதை தாண்டி சினிமாவில் பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்துள்ளார்
இந்நிலையில் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை , குற்றம், நோட்டா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி பாடலாசிரியர் சினேகன் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில் ஜெயலட்சுமி சிநேகம் பவுண்டேசன் பெயரை பயன்படுத்தி
பண மோசடி செய்வதாக சென்னை உயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையில் விஜயலட்சுமி வேண்டும் என்றே சினேகன் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறிய நிலையில் இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி புகார் அளித்து வந்தது அடுத்து இதன் மீது வழக்கு பதிவு செய்து
விசாரித்த காவல் துறையினர் ஜெயலட்சுமி வீட்டை சோதனை போட்டதை அடுத்து அவரை கைது செய்துள்ளனர் . இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………