இன்றைய சினிமாவில் புதுமுகங்களாக பல நடிகர்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது திறமையான நடிப்பால் தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற
திரைப்படமான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சூரி. இந்த படத்தை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில் அடுத்த கட்டமாக குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து இன்றைக்கு ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்
விடுதலை இரண்டாம் பாகம் , கருடன் மற்றும் கொட்டுகாணி போன்ற பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அதோடு பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் எழு கடல் எழு மலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சூரி அவர்களின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் முத்துக்காளை அவர்களின் திருமண விழாவில் வைகைபுயல் வடிவேலு, சின்ன கலைவாணர் விவேக் உள்ளிட்ட பல முன்னணி காமெடி நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களுடன் ஒன்றாக சூரி ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது………………