தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகளில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து வருபவர் பிரபல முன்னணி நடிகை அமலாபால் . இதையடுத்து பிரபலமாக தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு
முன்னர் பிரபல இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதையடுத்து சில காலம் தனிமையில் படங்களில் நடிப்பதை கவனம் செலுத்தி வந்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அமலாபால்
காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியான நிலையில் அதை உறுதிபடுத்தும் வகையில் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் மேலும் நடிகை அமலாபால் படங்களில் நடிப்பதை விடுத்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக
உள்ளார் இந்நிலையில் தொடர்ந்து மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வந்ததை சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைபடத்தை பகிர்ந்துள்ளார். அதோடு அந்த பதிவில் ஹாப்பி டூ கிட்ஸ் என பதிவிட்டுள்ளார் இதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…………………..