தமிழ் சினிமாவில் என்னதான் இன்றைக்கு பலதரப்பட்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் அந்த காலத்தில் வெளிவந்த பல படங்கள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் நிலையாக இருந்து வருகிறது . இப்படி ஒரு நிலையில் 90-களின் காலகட்டத்தில் வெளியாகி பலத்த பிரபலத்தை பெற்ற திரைப்படங்களில் ஒன்று அரண்மனை கிளி . மேலும்
சொல்லப்போனால் இந்த படத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு இளையராஜா அவர்களின் இசை மற்றும் ராஜ்கிரண் அவர்களின் நடிப்பு என மிரட்டியிருந்தது. இந்த படத்தை ராஜ்கிரண் அவர்களே நடித்து தயாரித்து இயக்கியிருந்தாலும் படம் வெற்றி பெற்றது என்னமோ இளையராஜா அவர்களின் இசைக்காக தான் எனலாம். இதையடுத்து இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து
பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை காயத்ரி. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் அச்சு அசலாக கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார் இந்நிலையில் இந்த படத்தை அடுத்து ஒரு சில படங்களிலேயே நடித்த நிலையில் அதன்பின்னர் அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததை
அடுத்து சமீபகாலமாக சீரியல்களில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து தனியார் சேனலான ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இப்படி இருக்கையில் இவர் குறித்த பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………….