பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்படும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சமையல் போட்டியை மையமாக கொண்ட நிலையில் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்வதோடு
சமையல் மட்டுமின்றி நகைச்சுவையை மையமாக கொண்ட நிலையில் இதற்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதையடுத்து குக் வித் கோமாளி வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இன்னும் சில வாரங்களில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் கோலாகலமான முறையில் துவங்க உள்ளது. இதையடுத்து
இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் எனும் ஆர்வம் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த முறை பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது குக் வித் கோமாளி டீம். அந்த வகையில் இதுவரை இருந்த சீசன்களில் செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக இருந்து வந்த நிலையில் இந்த சீசனில் புது மாற்றமாக செப் வெங்கடேஷ் பட் பதிலாக
புதிதாக நடுவர் ஒருவரை மாற்றியுள்ளனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் செப் தாமுவுடன் இணைந்து நடிகரும் சமையல் ஜாம்பவனுமான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது…………………
Cooku with Comali 5 😀🤣 | Coming Soon | Launch Promo | #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu #ChefMadhampattyRangaraj #ChefMadhampatty pic.twitter.com/gUuUmFoe6z
— Vijay Television (@vijaytelevision) March 18, 2024