கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக பலரும் இதன் விளைவாக காலமாகியும் வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபல நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள தகவல்கள் இணையத்தில்
வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் உறைய செய்துள்ளது. அந்த வகையில் தனியார் சேனலான வவிஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் லொள்ளு சபா சேஷு. இவர் முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த
துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கியதை அடுத்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான வடக்குபட்டி ராமசாமி படத்தில் வேற லெவலில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறான
நிலையில் இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் அவர் மீண்டும் நலமுடன் திரும்பி வர பிரர்த்தனை செய்து வருகின்றனர்……………..