தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல நடிகர்கள் புதுமுகங்களாக அறிமுகமாகி வரும் நிலையில் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக ரசிகர்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தையும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் சிறு கதாபத்திரத்தில் நடிப்பதன் மூலமாக சினிமாவில்
அறிமுகமாகி இன்றைக்கு ஹீரோவாக பல படங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சந்தானம். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடக்குபட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை அடுத்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சந்தானம் பலத்த சிவா பக்தர் எனும் நிலையில்
இவர் நேற்றைய நாளில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள இஷா ஆதியோகி விழாவில் கலந்து கொண்டுள்ளனர் . அதோடு சந்தானம் சிவபக்தர் என்பதை தாண்டி சத்குரு அவர்களின் மிகப்பெரிய சீடர் என்பது குறிபிடத்தக்கது. இதையடுத்து அந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள்
பலரும் கலந்து கொண்ட நிலையில் விழாவில் முக்கிய கட்டமான பிரம்ம முகுர்த்த வேளையில் அவர் சிவனை மனமுருகி வேண்டிய நிலையில் அவரது கண்ணீர் தாரை தாரையாக வந்துள்ளது . இதனைதொடர்ந்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…………………