தற்போது மீடியாவில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது என பார்த்தால் அது தல அஜித் அவர்கள் குறித்தது தான் காரணம் அவர் உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து வருவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் உரிய
செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் தல அஜித் அவர்களின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் செய்தி நிருபர்களிடம் பேசியபோது, அனைவரும் கூறுவது போல அஜித் அவர்களுக்கு மூளையில் கட்டி எதுவும் இல்லை அது முற்றிலும் பொய்யான தகவலே. மேலும் அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் அவரது
காதின் கீழ் மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து மருத்துவர்கள் இதற்கு மைனர் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என கூறியதை அடுத்து அவருக்கு சுமார் அரைமணிநேரம் அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்த அந்த நாள் இரவே அவரை சாதாரண வார்டுக்கு மாற்றிய
நிலையில் அவர் குணமுடன் வீடு திரும்பினார் அதிகபட்சமாக இன்று இரவு அல்லது நாளை அவர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என அவர் விளக்கமாக பதில் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது………………