பொதுவாக திரையுலகில் நடிப்பவர்கள் குறித்த எந்தவொரு தகவல்கள் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வரும் பட்சத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார். இந்நிலையில் இவருக்கு மக்கள் மட்டுமின்றி சினிமா உலகிலும் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் இதையடுத்து தல
அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு காட்சிகள் அசார்பைசனில் நடந்து வரும் நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கபட்டு இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
வருகிறது. இது குறித்து விசாரிக்கையில் அஜித் அவர்களுக்கு காதின் கீழ் மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருந்த நிலையில் அதற்காக மருத்துவமனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவருக்கு என்ன ஆச்சு என பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததை அடுத்து தல அஜித் மற்றும் அவரது மனைவியுடன்
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய வீடியோவும் அவர் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ள தகவலும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலக வாசிகள் மத்தியில் பரவலாக வைரளாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாகி மீண்டும் படபிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்………………….