வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிலையில் அவர்களும் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பல முன்னணி தொடர்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிதுள்ளதொடு சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகர் பிர்லா போஸ். இப்படி இருக்கையில் இவர் தற்போது தங்கமகள்
தொடரில் முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இவர் சென்னையில் பிரபல அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் இளைஞர் ஒருவர் எதிர்பாரதவிதமாக காரை இடித்ததை அடுத்து அவரை மிகவும் கோபமாக பேசியுள்ளார். இதற்கிடையில் இரு தரப்பினருக்கும் மிகுந்த பிரச்சனை எழுந்ததை அடுத்து இதனால் கடுப்பான இளைஞர் பிர்லா போஷின் மகனை கடத்த திட்டமிட்டு
தனது பத்து நண்பர்களுடன் இணைந்து பிர்லா சூட்டிங் காரணமாக வெளியூர் சென்றதை அடுத்து அவரது மகனை கடத்தி சரமாரியாக தாக்கியுள்ளார்கள். இதையடுத்து யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி வீட்டில் வந்து இறக்கி சென்றுள்ளனர் உடனடியாக அவரை பார்த்த குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மருத்துவர் அவருக்கு உள்காயம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து கடத்தியது கீழ் வீடு இளைஞர் தான் என தெரிந்த உடன் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் இந்த வழக்கை விசாரித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………..