இன்றைய சினிமாவில் பல முன்னணி பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து படங்களில் அறிமுகமாகி வரும் நிலையில் இதில் ஒரு சில நடிகர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகுமார் அவர்களின் இருமகன்களும் சினிமாவில்
முன்னணி ஹீரோக்களாக ஜொலித்து வரும் நிலையில் அதில் அவரது இளைய மகனான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து தற்போது 96 பட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை அடுத்து அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க
ஒப்பந்தமாகி உள்ளார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி அதில் பேசுகையில் , எங்களை ஒருமுறை போலீஸ் கைது செய்து நீதிமன்றம் வரை சென்றதாக கூறியுள்ளார் அது குறித்து கேட்டபோது ஒருமுறை அமேரிக்கா சென்ற கார்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் சென்றுள்ளார் இதையடுத்து ஒரு காரில் பாதி நண்பர்களுடன் கார்த்தியுடன் நண்பர்கள் சிலரும் சென்ற நிலையில் இதில் முன்னே சென்ற கார்
வேகமாக சென்றதை அடுத்து கார்த்தி வழி தெரியாத நிலையில் அவரும் அதை பின்தொடர்ந்து வேகமாக சென்ற நிலையில் அவர்களை மடக்கி பிடித்த போலீசார் நீதிமன்றம் வரை கொண்டு சென்று வழக்கு போட்டு அவர்களுக்கு சுமார் 250 டாலர் வரை அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………..