தற்போது சினிமாவில் பலரும் புதுமுகங்களாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமார். இந்நிலையில் இவர் பிரபல நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மகன் மற்றும் மகள்கள் உள்ளார்கள் இதில் பலரும் திரையுலகில்
நடித்து வரும் நிலையில் அவரது மகளும் நடிகையுமான ஸ்ரீதேவி தனது குழந்தை பருவம் முதலே படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ரிக்ஸா மாமா படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஹீரோயினாக தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஈஸ்வர்
படத்தின் மூலமாக அடையாளபடுத்தி கொண்டார். இதனையடுத்து தேவதையை கண்டேன், ப்ரியாமண தோழி, தித்திக்குதே போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக படங்களில் நடிக்காமல் குடும்பத்தை கவனிப்பதில்
ஆர்வம் காட்டி வந்ததை அடுத்து இவர்களுக்கு ரூபிகா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது . இந்நிலையில் அவரது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது கணவரை பார்த்த பலரும் அட இவரா அது என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………………