தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ அதே அளவிற்கு சின்னத்திரையில் சீரியல் நடிகர்களும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார்கள் எனலாம். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவியில் வெளியான சின்னதம்பி தொடரில் கதையின் நாயகியாக அறிமுகமாகி இன்றைக்கு பல முன்னணி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருபவர் பிரபல நடிகை பாவனி. இதையடுத்து
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அதில் அமீரை காதலித்த நிலையில் தற்போது இருவரும் லிவிங் டூ கேதார் முறையில் வாழ்ந்து வருவதோடு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாவனி பேசுகையில், என்னை விரும்புவர்களுக்கு நான் அதிகபடியான அன்பை தருவேன் என்னைப் பற்றி யோசிப்பதை விட அவர்களுக்காக யோசித்து நிறைய விசயங்களை
செய்வேன். அதோடு எனது முன்னாள் கணவர் தற்கொலை செய்ததற்கு நான் தான் காரணம் என குறிப்பிட்டு அவரை நான்தான் கொன்றேன் என பல கமெண்டுகளை கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு எல்லாம் விளக்கம் கொடுக்க நினைத்தது இல்லை காரணம் அது எல்லாம் கடந்து சென்று விடும். இதையடுத்து இப்போது நான் அமீருடன் இருக்கும் நிலையில் அவரையும் நான் கொலை செய்யபோகிறேன் என கூறி வருகிறார்கள் எனது முன்னாள் கணவரும்
நானும் எத்தனை வருடங்கள் காதலித்தோம் எந்த மாதிரியான அன்பை வெளிப்படுத்தி கொண்டோம் என்று யாருக்கும் தெரியாது. இது மாதிரியான விசயங்களை பேசும் போது எனக்கு அழுகை வந்துவிடும் பொதுவெளியில் அழாமல் இருந்தாலும் தனியே சென்று நிறைய நாட்கள் அழுது இருக்கிறேன் என உருக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………