அன்றைக்கு வெள்ளித்திரையில் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல முன்னணி ஹீரோயின்கள் தற்போது பட வாய்ப்பு இல்லாத நிலையில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருந்ததோடு பல இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் முதன் முதலில் தெலுங்கில் சூப்பர் ஸ்டார்
நடிகரான நாகர்ஜூனாவின் சூப்பர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது அழகான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு அதன் மூலம் தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரெண்டு படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதையடுத்து அம்மினிக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த மாபெரும் பிரமாண்டமான திரைப்படமான
பாகுபலி படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இருப்பினும் இந்த படத்திற்கு பிறகு சும்மா இருக்காமல் கதைக்கு ஏற்ப நடிக்க எண்ணி இஞ்சி இடுப்பழகி படத்தில் தனது உடல் எடையை கூட்டி நடித்து இருந்தார். அதன் பின் அந்த எடையை குறைக்க முடியாமல் தவித்து வருவதோடு பாகுபலி இரண்டாம் பாகத்தில் எதோ சேர்த்து விட்டோமோ எனும் நிலையில் ராஜமௌலி அனுஷாவின் உடல் எடையை குறைத்து காட்ட கிராபிக்ஸ் எல்லாம் செய்துள்ளார். இப்படி இருக்கையில் அம்மிணியின் கல்யாண வாழ்க்கை பற்றி பிரபல சர்ச்சை நாயகனாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் அனுஷ்காவுக்கு நாற்பது வயதை கடந்த இன்னும் திருமணம்
ஆகாமல் இருந்து வரும் நிலையில் அனுஷ்காவும் பிரபல நடிகரான பிரபாசும் காதலித்து வந்ததாகவும் மேலும் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் பல வதந்திகள் வெளிவந்த நிலையில் பின்னர் இருவரும் நண்பர்கள் என கூறி பிரிந்து விட்டனர். இது ஒருபுறம் இருக்க அனுஷ்காவின் உடல் எடை இன்னும் சற்றும் குறையாமல் இருக்கும் நிலையில் எந்த தொழிலதிபரும் அம்மிணியை திருமணம்செய்ய சீண்டாத நிலையில் அம்மிணியை விட வயது அதிகமானவர்கள் கூட அவரை அக்கா என அழைக்கும் அளவிற்கு உள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….