சும்மாவே இருக்கமாட்டாங்க போல …. கல்யாணம் முடிந்த நிலையில் மீண்டும் நயன்தாரா -பிரபுதேவா காதல் !!!

277

மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மட்டும் தான். இவ்வாறு இவ்வளவு பிரபலமாக இருக்கும் இவர் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவரும் இறுதியில் திருமணம் செய்து கொள்ள ,முடிவு செய்து இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது

திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பல இந்திய சினிமா பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதையடுத்து இவரது திருமண வாழ்க்கை துவக்கத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை இணையத்தில் கூறி வரும் நிலையில் இதற்கு எதிர்மறையாக ஒரு கும்பல் அம்மிணியின் பழைய காதல் கதைகளை கிளறி வருகிறது. அந்த வகையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்கும் முன்னரே பல நடிகர்களுடன் காதல் வதந்தியில் சிக்கியுள்ளார். இப்படி இருக்கையில் இவர் பிரபல முன்னணி நடிகரான

பிரபு தேவாவை காதலித்து வந்ததும் அது திருமணம் வரை சென்று நின்றதும் பலருக்கும் தெரிந்த ஒன்றே. நயன்தாரா பிரபுதேவாவை காதலித்து வந்த நிலையில் அவருடைய பெயரைக்கூட தனது கையில் பச்சைகுத்தி இருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம்  செய்து கொள்ள இருந்த நிலையில் பிரபுதேவாவின் மனைவி லதா விவாகரத்து செய்ய மறுக்க மற்றும் சில பிரச்சனைகளால் இவர்களது திருமணம் நின்றதோடு காதலும் பாதியிலேயே போனது. இவ்வாறு இருக்கையில் இவர்களது காதல் முறிவுக்கு காரணம் என்ன யார் என்பது குறித்த பல தகவல்கள்

சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி வருகிறது. நயன்தாரா பிரபுதேவாவை காதலிப்பதற்கு முன்னரே சிம்புவை காதலித்து வந்தார் இப்படி இருக்கையில் பிரபுதேவா ஒருமுறை நீ ஏன் சிம்புவை கழட்டிவிட்ட என கேட்க இது பூகம்பாய் வெடிக்கவே இவர்களுக்குள் பிரச்சனை பெரிதாகி அது பிரிவுக்கு காரணமானதாக பல தகவல்கள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. அம்மினிக்கு இப்போது தான் திருமணம் முடிந்து இருக்கும் நிலையில் இதுபோன்ற தகவல்களை பரப்பி அவரை சர்ச்சையில் சிக்கவைத்து வருகின்றனர்…

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here