தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் மக்கள் மத்தியில் அதிகளவில் பார்க்கபடுவதோடு அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் பலத்த பிரபலத்தையும் அடைகின்றனர். இப்படி இருக்கையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் வேற லெவலில் பிரபலமாகி வருவதோடு ரசிகர் பட்டாளமும் அதிகரித்த வண்ணம் உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த சேனலில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும்
அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசபோராட்டத்தை மையமாகும் வைத்து ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை பலரும் ரசிகர்களாக உள்ளார்கள். இதைதொடர்ந்து இந்த தொடரில் சுஜிதா, குமரன், காவ்யா, வெங்கட், ஸ்டாலின் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து இந்த தொடரில் காமெடி, வில்லி, நல்லவர் போன்ற பல கேரக்டரில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா ராஜ்குமார். தமிழகத்தில் மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்ட இவர் கல்லூரி படிப்பான எம்சியே படிப்பை முடித்து சென்னை சைதாபேட்டை காவல் நிலையத்தில் ஹார்ட்வேர் இஞ்சினியராக
தனது வேலையை ஆரம்பித்தார். இருப்பினும் மீடியா பக்கம் அதித ஆர்வம் கொண்ட ஹேமா அதன் பின்னர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக திரை வாழ்க்கையை துவங்கியதை அடுத்து விஜய் டிவியில் வெளியான ஆபிஸ் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இதே சேனலில் மெல்ல திறந்தது கதவு, சின்னதம்பி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மீனா பாண்டியன் ஸ்டார்ட்ஸ் தொடரில் நடித்து வருவதோடு யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் அதில் சமீபத்தில் எனக்கு ஆபரேசன் எனும் தலைப்பில் வீடியோ ஒன்றை போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் பலரும்
மீனாவுக்கு என்ன ஆச்சு என்பது போலன பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள். இப்படி இருக்கையில் இது குறித்து விசாரித்த போது சில மாதங்களாக ஹேமாவின் கழுத்தின் கீழ் பகுதியில் நான்கு சென்டிமீட்டர் அளவில் சிறிய கட்டி இருந்ததை அடுத்து இது குறித்து டாக்டரிடம் செக் செய்த பின்னர் ஒருவேளை இது கேன்சர் கட்டியாக மாறிவிடுமோ எனும் பயத்தில் அடிக்கடி ,மருத்துவமனையை அணுகியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த கட்டியை நினைத்து தினமும் தூங்காமல் தவித்து வந்த நிலையில் பின்னர் தனது ஒட்டு மொத்த குடும்பத்துடன் பலமாக
ஆலோசித்த பின் அந்த கட்டியை அகற்ற முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் அவருடைய இந்த நிலையில் அவரை முழுவதுமாக அவருடைய தங்கைதான் கவனித்துள்ளார் மேலும் இது குறித்து பேசிய ஹேமா பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சியம் செய்ய வேண்டாம் அப்படி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….