வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருவதோடு அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல முன்னணி டிவி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பலரும் கலந்து கொண்டு தற்போது
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து பல நெகடிவ் கமெண்டுகளால் பிரபலமான ஜூலியை யாராலும் மறக்க முடியாது. இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் தொடர்ந்து கேலி கிண்டலுக்கு ஆளாகி வந்த ஜூலி மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டு தனது இமேஜை மாற்றி கொண்டதை அடுத்து தற்போது அவருக்கு ஆதரவுகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் ஜூலி
தற்போது தனது செவிலியர் பணியை விடுத்து முழுநேரம் சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார் இதையடுத்து படங்களில் நடித்து வருவதோடு சீரியல்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ஜீ தமிழ் சேனலில் வெளியாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் நடித்திருந்தார். மேலும் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருவதோடு அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் தனது முக அழகுக்காக ஜூலி சிகிச்சை செய்து கொண்டதை வீடியோவாக எடுத்து
பதிவிட்டுள்ளார் மேலும் அந்த சிகிச்சையின் பெயர் வம்பைர் பேசியல் எனப்படும் ரத்தத்தின் மூலம் முகத்தை அழகுபடுத்தும் சிகிச்சையை ஜூலி எடுத்து கொண்டுள்ளார். அந்த சிகிச்சைக்கு பிறகு ஜூலியின் முகம் முன்பை காட்டிலும் தங்கம் போல ஜொலிக்க ஆரம்பித்து விட்டது இதையடுத்து இந்த வீடியோ மற்றும் தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….
View this post on Instagram