இன்றைக்கு வெள்ளித்திரையில் எத்தனையோ புதுமுக இயக்குனர்கள் புதிதாக வந்து பல வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் இன்றளவும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பதோடு தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை கொடுத்து மக்கள் மத்தியிலும் தனக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் வைத்திருப்பவர் பிரபல ,முன்னணி இயக்குனர் பாலா. பிரபல முன்னணி இயக்குனரான அறிவுமதியின் சிஷ்யன் எனும் தோரணையில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆக
தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார் . பாலாவின் படம் என்றாலே புதிய கதாபாத்திரம் வித்தியாசமான கதை வினோதமான நிகழ்வும் இருக்கும் என அனைவரும் அறிவர். மிகவும் அதிகமான தலைமுடி உள்ள ஹீரோ. வித்தியாசமான வில்லன் போன்றவைகள் இருக்கும் என அனைவரும் அறிவர். அந்த மாறி ஒரு படத்தில் நடிக்க அஜித்துக்கு வாய்ப்பு கொடுக்க பட்டது . அவரும் அந்த வாய்ப்பை ஏற்று நடிக்க சம்மதம் தெரிவித்தார். அட்வான்ஸ் சும் வாங்கினர் என கூறப்படுகிறது. அவரும் அதை ஒப்புகொண்டார். பாலா வும் இதை பற்றி பல இடங்களில்
கூறியுள்ளார். இப்பொழுது அந்த படத்திற்கு ஆர்யா தேர்வு செய்யப்பட்டார். தல அஜித் நிராகரிக்க பட்டார். தல அஜித்தை புக் செய்து நிராகரிக்கபட்டது பெரும் சர்ச்சையாகி கொண்டிருக்கிறது. நடிகர் ஆர்யாவும் திறமையற்றவர் கிடையாது. நான் கடவுள் படம் முதல் பாலா விற்கு ஆர்யா மீது பெரும் நம்பிக்கை உள்ளது. தயாரிப்பாளர் அந்த அட்வான்ஸ் ற்கு வட்டியுடன் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் பணம் மட்டும் திருப்பி தரப்படும் என்றனர். இதை பற்றி பாலா வும் பல மேடைகளில் கூறியது என்னவென்றால்,
எனக்கும் அஜித் க்கும் எந்த ஒரு பிரச்சனை களும் இல்லை. தல அஜித்தை நான் நிராகரிக்க வில்லை அவர் ஒதுக்கப்பட்டது பட குழுவினர் களால் என்று கூறியுள்ளார். அங்கு கைகலப்பு எதுவும் நடக்கவில்லை என்றும் கூறினார். இயக்குனர் பாலாவும் ஆன்மிகவாதி என்பதால் ஜோதிடம் மூலமாக அஜித் நிராகரிக்க பட்டிருக்கலாம் என பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. பிரச்சனை சுலபமாக முடிந்தது என பாலா கூறியுள்ளார் என தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்த வண்ணம் இருந்தது . இதையடுத்து இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது …..