எம் ஜி ஆர் பாணியை பின்பற்றிய லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு… அதுக்கு தலைவன் என்னெல்லாம் பண்ணிருக்காரு பாருங்க …..

1037

வெள்ளித்திரை சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டு பல படங்களில் நடித்து வரும் நிலையில் தென்னிந்திய தமிழ் சினிமா வெள்ளித்திரையில் என்றும் நடிகர் சிம்புவுக்கு தனி இடமும் நீங்கா இடமும் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இவர் தற்போது ஒபெலி என். சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பத்து தல என்ற படம்

நடித்து கொண்டிருக்கிறார்  அந்த டைரக்டர் வேற யாரும் இல்லைங்க “சில்லுன்னு ஒருகாதல்” படம் இயற்றிய அதே டைரக்டர் தான். இந்த படத்தில் சிம்பு மட்டும் இல்லைங்க அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டடம், கடல் போன்ற படங்களில் நடித்த நவரச நாயகனான கார்த்திக் இன் மகன் கௌதம் கார்த்திக்கும் இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின்னாக பிரியா பவானி சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன், டீஜே அருணாச்சலம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் இசை

அமைப்பாளராக எ.ஆர். ரகுமான் உள்ளார். இந்த படத்தினை வழங்குவது ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. முன்பு போல் இல்லாமல் சிம்பு இப்படத்தில் ஹார்டு ஒர்க் செய்வதாக சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இப்படத்தில் சிம்புவின் பெயர் கே.ஜி. ஆர் ஆகும். எம் ஜி ஆர் , எஸ் டி ஆர் , கே ஜி ஆர் ஏதோ தொடர்பு உள்ளது போல் தெரிகிறதா? இல்ல எம் ஜி ஆர் போல் மாற முயற்சி செய்கிறார் சிம்பு? என பல கேள்விகள் எழுந்து கொண்டு

வருகிறது சினிமா வட்டாரத்தில். அரசியலில் ஈடுபட முயற்சிக்கும் வண்ணம் இந்த பெயர் உள்ளதால், இது அரசியல் படமாக கூட இருக்கலாம் என அரசியல் கட்சிகள் வதந்தியை கிளப்பிக்கொண்டுள்ளது. என்னமோ ஏதோ? படம் ரிலீஸ் ஆன தான் தெரியும். சிம்புவின் படம் என்றாலே குழப்பத்திற்கு பஞ்சம் இல்லாம போயிடுச்சு போங்க என பலரும் தங்களது விமர்சனங்களை அள்ளிதெளித்து வருகின்றனர்….

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here