Sunday, April 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்ஒத்த படம் தான் மொத்த காசும் போச்சு ... கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் நடிகர்...

ஒத்த படம் தான் மொத்த காசும் போச்சு … கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ….

இன்றைக்கு சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரை பக்கம் நகர்ந்து வருவதோடு மக்கள் மத்தியில் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர் அந்த வகையில் இவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருப்பதோடு இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து வருவது பிரபல முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் . தற்போது தமிழ் சினிமாவில்  வளர்ந்து வரும் நடிகர்கள் மத்தியில் விறுவிருவென வளர்ந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து சாதித்த நடிகர் என்றால் சிவகார்த்தியேனை கூறலாம். இவர் தற்பொழுது

பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து இப்போது அந்த படம் ரிலீஸ்  ரெடி ஆகிய நிலையில் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக உள்ளார். ஆனால் அவரின் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த  அயலான் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் பல சிக்கலில் மாட்டி தவிக்கிறது. 2017 இல் ஆரம்பித்த படம் 2021 இல் தான் முடிந்தது. இதில் ஹீரோயினாக ராகுல் ப்ரீட் சிங் நடித்துள்ளார் மேலும்  இப்படத்தினை ஆர் டி ராஜா தயாரித்து வந்தார். ஆனால் சிவகார்த்திகேயன் ஆர் டி ராஜாக்குமான பிரச்சனையில் இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிக்க ஆரம்பித்தார்.

சிவகார்த்திகேயன்னும் பல பினான்சியர் களின் உதவியுடன் தான் தயாரித்து கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகதது சிவகார்த்திகேயனை கடன் பிரச்சனையில் மாட்டி தவிக்க வைத்துள்ளது. இப்படத்தின் எடிட்டிங்கும் இன்னும் முடிந்த பாடில்லை. இந்த படம் பாலிவுட் சினிமாவிலும்  வெளியாக உள்ளதால் பலவிதமான மாறுபட்ட வேலைகள்  எல்லாம் பார்த்து பார்த்து செய்ய வேண்டியதால் எடிட்டர் இன்னும் எடிட்டிங் முடியவில்லை என்று கூறியதாக

கூறப்படுகிறது. இந்த ஒரு படம் ரிலீஸ் ஆனால் சிவகார்த்திகேயனின் புகழ் பாலிவுட் முதல் கோலிவுட் வரை எல்லாரிடமும் பரவி தனி சிறப்பை திகரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அதுவரை சிவகார்த்திகேயன் என்ன செய்வது என்று தெரியாம கடன் பிரச்சினையால் நாளா பக்கமும் மாட்டி தவிக்கின்றாராம் என்று தகவல் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர் ….

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments