தற்போது வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் அதில் நடிக்கும் நடிகர்களும் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள் அந்த வகையில் அதை தாண்டி பிரபலமடைந்து இன்றைக்கு பலரும் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் பிரபல தனியார் முன்னணி சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கி அதில் தனது தடிப்பான பேச்சு மற்றும் வசீகரமான அழகால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர். இவர் இதையடுத்து பல முன்னணி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அதில் நடித்து மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டு மேயாத மான் படத்தின் மூலம்
கதாநாயகியாக தன்னை திரையுலகிற்கு அறிமுகபடுத்தி கொண்டார். முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பு மற்றும் இளமை மிகுந்த அழகால் பலரின் கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தது மட்டுமின்றி தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் அடுத்தடுத்து கடைக்குட்டி சிங்கம், மாபியா, யானை போன்ற பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களின் ஜோடி தேர்வாக அம்மிணி தான் அதிகளவில் சிபாரிசு செய்யப்பட்டு வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி ம்டர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைப்பதில் கை தேர்ந்தவர். இப்படி இருக்கையில் சமீபத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் சோகமான
பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எனது நினைவுகள் தொலைபேசியில் எடுக்கும்போது வந்து என்னை உணர்ச்சி வசபடுத்தியது. அந்த தருணத்தில் மிகவும் இருண்ட இடத்தில் இருப்பதாக உணர்தேன் அதேபோல் அன்று காலை எங்காவது ஓடிவிடலாமா என்றெல்லாம் யோசித்தேன் ஆனால் அன்று மாலை எந்த திட்டமும் இல்லாமல் நாங்கள் இருவரும் விமானத்தில் ஏறினோம். அதை இப்போது நினைத்து பார்க்கும்போது யாருமில்லாதது போல் உணர்கிறேன் அதுவே அப்போது நான் நினைத்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இதை ஒரு கடினமான நேரம் என உணர்பவர்கள் இருந்தால் இது உங்களுக்கானது இது ஒரு நிலை மட்டுமே இதை நீங்கள் கடந்து செல்லக்கூடும்
மேலும் இது முடிவல்ல. அடுத்த மூன்று வருடங்களில் உங்களுக்கு புதிதாக பல பிரச்சினைகள் வரும் அப்போது நீங்கள் உங்களுடைய பழைய பிரச்சினைகளை நினைத்து சிரிக்க ஆரம்பித்து விடுவீர்கள் அதுமட்டுமின்றி அதற்கான மான வலிமையை நீங்கள் வளர்த்து கொள்வீர்கள் . எப்போதும் புன்னகையுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் நம் வாழ்வில் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கும் என உருக்கமாக கூறியிருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது….
View this post on Instagram