Friday, September 13, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்அப்படிபோடு பிக்பாஸ் சீசன் 6- ல இந்த சீரியல் நடிகையா ... அப்ப இந்த தடவ...

அப்படிபோடு பிக்பாஸ் சீசன் 6- ல இந்த சீரியல் நடிகையா … அப்ப இந்த தடவ தரமான சம்பவம் காத்திருக்கு ….

சின்னத்திரையில் பிரபலமான முன்னணி தனியார் சேனலான விஜய் டிவிக்கு எப்பொழுதும் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பும் ஆதரவும் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் காரணம் இந்த சேனலில் வெளியாகும் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் தான் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த சேனலில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி உலக பல தமிழ் ரசிகர்களை தன் வசம் கவர்ந்து இழுத்து

இருக்கும் ஒரு ரியாலிட்டி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் இந்த முறை இருபதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ள நிலையில் இதில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளரான ரக்க்ஷன்

கலந்து கொள்ள உள்ளார். மேலும் இவரை அடுத்து பிரபல சீரியல் நடிகையான ரோஷினி ஹரிப்ரியன் கலந்து கொள்ள உள்ளார் இவர் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றார் இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்ட போதிலும் அம்மினிக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை அதற்காக அம்மிணியும் எவ்வளவோ மாடர்னாக போடோஷூட் நடத்தியும் எந்த பயனும் தராத நிலையில் தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு

செய்துள்ளார். மேலும் இவரை தொடர்ந்து பிரபல சூப்பர் பாடகியான ராஜலக்ஷ்மி, டி இமானின் முன்னாள் மனைவியான மோனிகா ரிச்சர்ட் ,  சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்குமார், சில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சீரியல் நடிகை ஸ்ரீநிதி, சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஜிபி முத்து மற்றும் டிடி உட்பட இன்னும் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வமான தகவல்கள் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியகும் என எதிர்பார்க்க படுகிறது …

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments