தமிழ் சினிமாவில் ரஜினி கமல் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமின்றி இன்றளவும் பல படங்களை இயக்கி வருவதோடு பல இளம் இயக்குனர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமார். இந்நிலையில் இவரது படங்களில் எதாவது ரோலில் நிச்சயம் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் நடித்து விடுவார் எனலாம் அந்த அளவிற்கு திரையுலகில் இருவரும் நல்ல நன்ன்பர்களாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை கேஎஸ் ரவிக்குமார் துப்பாக்கியில் சுட அவர் மீது குண்டு பாய்ந்த நிலையில் அவர்
நூலிலையில் உயிர் தப்பியுள்ளார். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து விசாரித்த போது கடந்த 1985 – ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் நாகேஷ் இயக்கத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ எனும் படத்தில் அவரது மகனான ஆனந்த் பாபுவும் ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் உதவி இயக்குனராக கேஎஸ் ரவிக்குமார் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்றிற்கான ஒத்திகை நாகேஷின் வீட்டில் நடந்துள்ளது. அந்த தருணத்தில் நாகேஷின் இளைய மகனுடன் கேஸ் ரவிகுமார் பொம்மை துப்பாக்கியில் ஈயத்தால் ஆன குண்டை போட்டு அதை
குறித்து வைத்து சுட்டு விளையாடி வந்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த ரம்யா கிருஷ்ணனின் அம்மா தனது கையில் குறி வைத்து சுடும் படி கூற கேஸ் ரவிக்குமாரும் சுட்டுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குண்டு அவரின் தோள்பட்டையை துளைத்துள்ளது மேலும் அதிகளவில் ரத்தம் வந்துள்ளது உடனே இதைபார்த்த ஆனந்த் பாபு அவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்க்க அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த குண்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்து பயந்து வீட்டிற்கு சென்ற கேஸ் ரவிக்குமாரின் வீட்டிற்கு அன்று இரவே போலிஸ் சென்றுள்ளனர். போலிசை பார்த்து மிரண்டுபோன ரவிக்குமார் வசம் போலீசார்
நீங்கள் பயப்பட வேண்டாம் ரம்யா கிருஷ்ணனின் அம்மா இந்த நிகழ்வு எதோ விளையாட்டாக நடந்தது தான் என ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை ஒரு கையெழுத்து போடுங்கள் என வாங்கி சென்று விட்டனர். அவர்கள் சென்ற மறுகணமே கேஎஸ் ரவிக்குமாரின் அப்பா இவரை பளாரென கன்னத்தில் ஒரு அறை விட்டுள்ளார். இந்த நிகழ்வு நடந்து பல வருடங்கள் ஆன நிலையில் சமீபத்தில் இது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…