திடீரென மாரடைப்பால் காலமான பிரபல முன்னணி இயக்குனர் …. உறைந்துபோன ஒட்டுமொத்த திரையுலகினர் ……

882

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக எதிர்பாராத பல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதோடு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி இயக்குனர் ஒருவர்  மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டகாரன் போன்ற பல வெற்றிப்படங்களில் பல முன்னணி

இயக்குனர்கள் வசம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதனை தொடர்ந்து கடந்த 1997-ம் ஆண்டு விக்னேஷ் மற்றும் தேவயாணி நடிப்பில் வெளியான காதலி படத்தின் மூலம் தன்னை இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இயக்குனர் சித்து. இவர் இது போன்று பல படங்களை இயக்கி உள்ளதோடு சின்னத்திரையில் ரோஜா உள்ளிட்ட பல முன்னணி சீரியல்களுக்கு கதை எழுதியும் வசன கர்த்தாகவும்

பணியாற்றி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சிகரம் பாரதிராஜாவை வைத்து கிராமத்து பின்னணியில் விவசாயியாக கடைமடை ஈனும் படத்தை இயக்க முடிவு செய்து இருந்தார். மேலும் இவர் தனது சகோதரர் பொன் ஆதி ஆறுமுகம் இயக்கிய பனை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் . இதனை தொடர்ந்து அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக

மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது இழப்பு படக்குழு மற்றும் திரையுலகினரை பெருத்த சோகத்தில் தள்ளியுள்ளது இதையடுத்து அவரது உடல் நல்லடக்கத்துக்காக அவரது சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டு வரபட்டு அங்கு அவருக்கு இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர் ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here