பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி வெகு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது எட்டாவது வாரத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதையடுத்து இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொன்ட நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் பதிமூன்று போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இருப்பினும் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனி துவக்கத்தில் இருந்தே போட்டியளர்கள் மத்தியில் சண்டைகளும் வம்புகளும் ஆரம்பித்த நிலையில் போட்டி நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த வார எவிக்சனில் மக்கள் அனைவரும் கணித்தபடி குயின்சி வெளியேறி இருந்தார். இதனைதொடர்ந்து இந்த வார எவிக்சன் லிஸ்ட்டில் வழக்கம்போல அசீம், கதிரவன், எடிகே, ராம், ஜனனி,
ஆயிஷா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் கமல் அவர்கள் டபுள் எவிக்சன் என கூறிய நிலையில் இந்த வாரம் எவிக்சனில் எந்த இரு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில் அசீம், கதிரவன், எடிகே மூவரும் அதிக வாக்குகளை பெற்று முதல் மூன்று இடங்களில் உள்ள நிலையில் ராம் மற்றும் ஆயிஷா குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருந்து வருகின்றனர்.
இதையடுத்து தொடர்ந்து இருவரும் குறைவான வாக்குகளை வாங்கி வரும் நிலையில் நிச்சயம் இவர்கள் இருவரும் இந்த வார டபுள் எவிக்சனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பகுந்த வட்டாரங்களில் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……