என்னது பிக்பாஸ் வீட்டில் மைனாவுக்கு ஒரு நாளைக்கு சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா ….. உளறிகொட்டிய சகபோட்டியாளர் மணிகண்டா … வெளியான வீடியோ உள்ளே …..

1751

பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி ஏறக்குறைய அறுபது நாட்களை எட்டியுள்ள நிலையில் தற்போது வீட்டில் மீதம் பதிமூன்று போட்டியாளர்கள் உள்ளார்கள். இந்நிலையில் துவக்கத்தில் இருபது போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இருந்தார். இதையடுத்து

வீட்டிற்குள் இவரால் பல பூகம்பங்கள் வெடிக்கும் என பலரும் எண்ணிய நிலையில் வந்ததில் இருந்து அம்மிணி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகிறார். மேலும் கடந்த வார எபிசோடுகளில் கூட இவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கூட சரியாக செய்யாமல் பலரிடமும் பல்பு வாங்கியிருந்தார். இந்நிலையில் இவரது நிலை குறித்து பேசிய அவரது நெருங்கிய நண்பரும் சக போட்டியாளருமான மணிகண்டா சகஜமாக

பேசியபோது தனலட்சுமியிடம் மைனாவின் சம்பளம் குறித்து உளறிகொட்டியுள்ளார் . அதன்படி மணிகண்டாவும் தனலட்சுமியும் பேசிகொண்டிருக்கும் போது, மைனா வாங்கும் சம்பளதிற்கு கூட தகுந்த வேலையை செய்யாமல் அலட்சியமாக விளையாடி வருகிறார் என கூறியுள்ளார். உடனே உண்மையை போட்டுடைக்கும் விதமாக தனலட்சுமி , அப்படி எவ்ளோ சம்பளம் மைனா வாங்குறாங்க என கேட்டுள்ளார் .

இதற்கு பதில் கொடுத்த மணி அவ ஒரு நாளைக்கு மட்டும் சம்பளமா 1.50 லட்சம் வாங்குவதாக கூறியுள்ளார் மேலும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகும் போது அவருக்கு சம்பளமாக மட்டும் 90 லட்சம் கிடைக்கும் என கூறியுள்ளார். இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here