பொதுவாக திரையுலகில் பொருத்தவரை பலரும் ஹீரோயினாக நடித்து வரும் நிலையிலும் இதில் பலரும் ஒரு சில படங்களுக்கு பின்னர் அவ்வளவாக பட வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் . இப்படி ஒரு நிலையிலோ தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல டாப் ஹீரோக்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை
என்றால் அது பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு சோலோ ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் கூட பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில்
அவருக்கு ஜோடியாக மட்டுமில்லாமல் முக்கிய கேரக்டரில் நடித்து பலரையும் வியப்படைய வைத்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் படங்களில் ஹீரோயினாக நடிக்க பல கோடிகளில் சம்பளத்தை வாங்கி வரும் நயன்தாரா பல முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சுமார் ஐம்பது வினாடிகள் மட்டுமே ஓடும் விளம்பரத்தில் நடிக்க மட்டுமே
சுமார் ஐந்து கோடி வரை சம்பளமாக வாங்கி வருவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோடு நயன்தாரா சொந்தமாக பல தொழில்களை செய்து வருவதோடு சொகுசு பங்களா, கார், விமானம், ஹோட்டல் என ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறபடுகிறது………………….