தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் நடந்து வரும் நிலையில் இதன் விளைவாக பலரும் நம்மை விட்டு விலகும் வகையில் பல முன்னணி திரையுலக பிரபலங்களும் காலமாகி வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி அவர்கள் . இவ்வாறு இருக்கையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவருடன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு மீரா எனும் பதினாறு வயது
மகள் ஒருவரும் உள்ளார் . இந்நிலையில் இவரது மகளான மீரா தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு ஒன்றில் படித்து வரும் நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணிக்கு தனது அறையில் தூக்கிட்டு சுயமாக தனது உயிரை பிரித்து கொண்டார் . இதையடுத்து இந்த தகவல்கள் வெளியானதில் இருந்து அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகம் மற்றும் மக்கள் மத்தியில் பெருத்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது . இதையடுத்து தென்னிந்திய அளவில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதோடு இணைய வழியாகவும் ஆழ்ந்த
இரங்கல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர் . இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் விஜய் ஆண்டனி மகளின் இழப்பு குறித்து உருக்கமான பதிவிகளை பதிவிட்டதோடு அதிரடியாக முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார். அதன்படி , தளபதி விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் போஸ்டர் இன்று மாலை உலகளவில் வெளியிட முடிவு செய்திருந்தனர் . இவ்வாறு இருக்கையில், தளபதி விஜய் தனது
இணைய பக்கத்தில் , விஜய் ஆண்டனி சார் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் எங்களுடைய பிரார்த்தனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எப்போதும் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் எங்களது படத்தின் போஸ்டரை இன்று வெளியிட விரும்பவில்லை ஆகையால் அதனை நாளை வெளியிடுவோம் என பதிவிட்டுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……….
Deepest condolences to @vijayantony sir for the unbearable loss.
Our prayers are with you & your family!We respect & believe it’s appropriate to postpone today’s #Leo poster reveal to tomorrow..
— Seven Screen Studio (@7screenstudio) September 19, 2023