தற்போது மக்களிடையே பெரிதளவில் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இதையடுத்து இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் வெளியாகி வரும் நிலையில் தமிழில் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட சீசன்களை கடந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வருவதை அடுத்து தற்போது தகவல்கள் மற்றும்
வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்களை உறைய செய்துள்ளது. அந்த வகையில் கன்னட மொழியில் பிக்பாஸ் சீசன் 10 துவங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களை கடந்ததை அடுத்து இதில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலம் வரதூர் சந்தோசை போலீசார் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து கைது செய்துள்ளனர் . இதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், கடந்த வாரம் வெளியான
பிக்பாஸ் சீசன் எபிசோடில் வரதூர் சந்தோஷ் தனது கழுத்தில் புலியின் பல்லை செயினாக போட்டு இருந்த நிலையில் இதனைபார்த்த கர்நாடக வனத்துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர் . மேலும் புலியின் நகம் மற்றும் பற்களை வைத்திருப்பது சட்டபடி குற்றம்
எனும் நிலையில் இவர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர் . இதையடுத்து இவருக்கு என்ன தண்டனை ந தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………….