கடந்த சில மாதங்களாக மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான லியோ படம் குறித்ததாக தான் இருக்கும். இந்நிலையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி, அர்ஜுன், மேத்யு என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் பிரமாண்டமான செட்
அமைத்து நடந்து இருந்தது . இதையடுத்து இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக இருப்பதாக கூறபடுகிறது . இந்நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பல சாதனைகளை படைத்து வருகிறது எனலாம் அதேபோல் வசூல் ரீதியாக அமோக வெற்றியை பெற்று வருவதை அடுத்து இதுவரை ப்ரீபுக்கிங் சோவில் மட்டுமே
இதுவரை சுமார் 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் உலகம் முழுதும் சுமார் 487 கோடிக்கு மேல் வியாபாரம் எட்டியுள்ளது இதனைதொடர்ந்து இந்த படம் 300 கோடிக்கு தயாரிக்கபட்ட நிலையில் இந்த படம் வெளியாகத நிலையிலேயே தயாரிப்பாளருக்கு 187 கோடி வரை லாபம் கொடுத்துள்ளது . இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள தளபதி விஜய் அவர்களின் சம்பளம் குறித்த தகவல்கள்
அண்மையில் இணையத்தில் வெளியாகி பலரையும் வாயடைக்க செய்துள்ளது எனலாம். காரணம் இந்த படத்தில் நடிக்க தளபதி விஜய் அவர்கள் 125 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ள நிலையில் அடுத்த படமான தளபதி 68 படத்தில் நடிக்க சுமார் இருநூறு கோடி வரை சம்பளம் பேசபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………..